உத்தனப்பள்ளி அருகே மொபட்டில் சென்ற போது தென்பெண்ணை ஆற்றில் தவறி விழுந்து கட்டிட மேஸ்திரி சாவு


உத்தனப்பள்ளி அருகே மொபட்டில் சென்ற போது தென்பெண்ணை ஆற்றில் தவறி விழுந்து கட்டிட மேஸ்திரி சாவு
x
தினத்தந்தி 26 Jun 2023 1:15 AM IST (Updated: 26 Jun 2023 8:33 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

உத்தனப்பள்ளி அருகே மொபட்டில் சென்றபோது தென்பெண்ணை ஆற்றில் தவறி விழுந்து கட்டிட மேஸ்திரி பரிதாபமாக இறந்தார்.

கட்டிட மேஸ்திரி

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பந்தாரஅள்ளி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி (வயது 35). அதே பகுதியை சேர்ந்தவர் தம்பிதுரை (37). கட்டிட மேஸ்திரிகள். நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு கொத்தகுறுக்கி வழியாக கடமல்பட்டி கிராமம் நோக்கி மொபட்டில் சென்றனர்.

தென்பெண்ணை ஆற்றில் அதிகளவு நீர் சென்றதால் கொத்தகுறுக்கி அருகே உள்ள தரைபாலம் மீது தண்ணீர் சென்றது. இந்த பாலத்தை அவர்கள் மொபட்டில் கடக்க முயன்றனர். அப்போது அவர்கள் மொபட்டுடன் தென்பெண்ணை ஆற்றில் தவறி விழுந்தனர்.

தண்ணீரில் மூழ்கி சாவு

இதில் தம்பிதுரை தண்ணீரில் மூழ்கி இறந்தார். வெங்கடாஜலபதி நீந்தி கரைக்கு வந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நேற்று போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தென்பெண்ணை ஆற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றினர். பின்னர் அவர்கள் தம்பிதுரையின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதுதொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story