ஆற்காடு ஒன்றியக்குழு கூட்டம்
ஆற்காடு ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
ஆற்காடு ஒன்றியக்குழு கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஸ்ரீமதி நந்தகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாமலை, பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஆற்காடு ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் உள்ள 65 அரசு தொடக்கப்பள்ளிகளை மழைக்காலத்திற்கு முன்பாக ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் பழுது நீக்கி செப்பனிடுதல் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய சிலைகள் அமைக்க வேண்டும் என்று தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள்.
கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணமூர்த்தி, கஜபதி, ஜெயகாந்தன், சுசீலாவேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்
Related Tags :
Next Story