நீண்டதூர ரெயில்களில் போதுமான வசதி செய்து தரப்படுகிறதா?
நீண்டதூர ரெயில்களில் போதுமான வசதி செய்து தரப்படுகிறதா? என பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் ரெயில் நிலையம் 133 ஆண்டுகள் பழமையானவை. இந்த ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை, நெல்லை, ெபங்களூரு, கோவை, புதுச்சேரி, மும்பை, கொல்லம், திருவனந்தபுரம், மைசூரு உள்ளிட்ட பல்வேறு பெருநகரங்களுக்கு நீண்டதூர ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சராசரியாக ஒரு நாளைக்கு 50-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகிறது. இங்குள்ள 4 பிளாட்பாரங்களிலும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் விருதுநகர் ரெயில் நிைலயத்துக்கு வந்து செல்கின்றனர். நீண்ட தூர ரெயில்களில் போதுமான வசதி செய்து தரப்படுகிறதா? என்பது குறித்து பயணிகள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர்.
தரமான உணவு
விருதுநகரை சேர்ந்த அலமு:- சென்னை செல்லும் ெரயில்களில் முன்பதிவு விவரங்களை ெரயில் புறப்படுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக இணையதளத்தில் வெளியிட்டால் இடமிருந்தால் ெரயிலில் செல்ல வாய்ப்பு ஏற்படும். மேலும் முன்பதிவு ெரயில் பயணிகளுக்கு தரமான உணவு கிடைக்க ெரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். ெரயில்களில் முன்பதிவு செய்யும்போது பெண்களுக்கு கீழ்படுக்கையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ெரயிலில் ஏற செல்லும்போது ெரயில் நிலையங்களில் பெண்கள் சிரமம் இன்றி ெரயில்களில் ஏறும் வகையில் முறையான டிஜிட்டல் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
மேலும் முன்பு போல் அறிவிப்பும் செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் இருப்பதால் ெரயில்களில் பெண்கள் ஏறும்போது விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. அனைத்து சென்னை செல்லும் ெரயில்களிலும், முன்பதிவு இல்லாத ெரயில் பெட்டிகளை கூடுதலாக இணைக்க வேண்டும். இடையில் ெரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்தது போல ெரயில்களில் பயணிகளுக்கு உடனடி மருத்துவ வசதி கிடைக்க நடவடிக்கை எடு்க்க வேண்டும்.
கூடுதல் ரெயில் பெட்டி
விருதுநகரை சேர்ந்த என்ஜினீயர் வடிவேல்:- சென்னையிலிருந்து இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ெரயில்களில் கூடுதல் கட்டணம் அறிவிப்பதற்காகவே அமல்படுத்தப்பட்டுள்ள பிரீமியம் தட்கல் முன்பதிவை கைவிட வேண்டும். ெரயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயில்களில் ெரயில் பெட்டிகள் நிற்கும் இடத்தை டிஜிட்டல் முறையிலான அறிவிப்பு பலகை மூலம் தெரிவிக்க வேண்டும். இருவழி ெரயில் பாதை பயன்பாட்டிற்கு வந்த பின்பு கூடுதல் ெரயில்கள் இயக்கப்படும் வரை சென்னை ெரயில்களில் முன்பதிவு மற்றும் முன்பதிவு இல்லாத ெரயில் பெட்டிகளை கூடுதலாக இணைக்க வேண்டும்.
செங்கோட்டை-தாம்பரம், அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ெரயில் அறிவிக்கப்பட்டும் இயக்கப்படாத நிலை உள்ளது. அதனை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்பதிவு ெரயில் பயணிகளுக்கு ெரயில்வே நிர்வாகம் தரமான உணவு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வப்போது சென்னை ெரயில்களில் முன்பதிவு ெரயில் பெட்டிகளில் வடமாநில தொழிலாளர்களின் பிரச்சினை ஏற்படும் நிலை உள்ளது. இதனை தவிர்க்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ெநடுந்தூர ரெயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும்.
தூய்மை பணி
வத்திராயிருப்பு இளையராஜா:- சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வரக்கூடிய ெரயில்களில் முறையாக பராமரிப்பு இல்லாததால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஒரு சில ெரயில்களில் பராமரிப்பு இருந்தும் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் குறைந்த அளவே உள்ளது. மேலும் பயணிகள் பயன்படுத்தக்கூடிய கழிவறைகளில் முறையான பராமரிப்பு இல்லாததால் துர்நாற்றங்கள் வீசுகிறது.
தொலைதூரத்திற்கு செல்லக்கூடிய பயணிகள் இதனால் கழிவறையை பயன்படுத்த முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே பயணிகளுக்கு பயன்படும் வகையில் கழிவறைகளை பராமரித்து தூய்மை பணியினை மேற்கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளுக்கு தூய்மையான போர்வை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பராமரிப்பு
அருப்புக்கோட்டை அருகே பெரியதும்மக்குண்டுவை சேர்ந்த மலர்விழி:- சென்னையில் இருந்து அருப்புக்கோட்டைக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் ெரயில் மட்டுேம இயக்கப்படுகிறது. இந்த ெரயிலும் வாரம் 3 முறை மட்டுமே இயக்கப்படுகிறது. அதிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதில் கூடுதலாக முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைக்க வேண்டும்.
ஒரே ஒரு ெரயில் மட்டுமே சென்னையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக செல்வதால் பொது ஒதுக்கீட்டில் முன்பதிவு செய்வது திருத்தங்கல் ெரயில் நிலையம் வரை மட்டும் உள்ளது. அதை அருப்புக்கோட்டை வரை விரிவுப்படுத்த வேண்டும். இந்த ெரயிலை தினசரி ெரயிலாக மாற்ற வேண்டும். நெடுந்தூர ரெயில்களில் கழிவறை சரியாக பராமரிக்கப்படவில்லை. தண்ணீர் தட்டுப்பாடும் உள்ளது. இ்வ்வாறு அவர்கள் கூறினர்.