குழந்தைகளுக்கு சத்துணவு முறையாக வழங்கப்படுகிறதா?


குழந்தைகளுக்கு சத்துணவு முறையாக வழங்கப்படுகிறதா?
x
தினத்தந்தி 20 April 2023 12:15 AM IST (Updated: 20 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு சத்துணவு முறையாக வழங்கப்படுகிறதா? என கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு சத்துணவு முறையாக வழங்கப்படுகிறதா? என கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

சத்துணவு

மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள ரேஷன் கடை, தடுப்பூசி போடும் மையங்கள், திரையரங்கு, அரசு போக்குவரத்துக்கழக பணிமனை உள்ளிட்ட இடங்களில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதையொட்டி மயிலாடுதுறை கீழநாஞ்சில் நாடு நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைக்கு சென்ற அவர் அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்தார். தொடர்ந்து தம்பிக்கு நல்லான்பட்டினம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் காலை இணை உணவான கொழுக்கட்டை உள்ளிட்ட சத்துணவுகள் குழந்தைகளுக்கு முறையாக வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார். மேலும் அங்கு சுகாதாரத்துறையின் சார்பில் நடைபெறும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை பார்வையிட்டார்.

கலந்துரையாடல்

இதையடுத்து குழந்தைகளிடம் பாடங்கள் குறித்து கலந்துரையாடினார். பின்னர் மயிலாடுதுறையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு சென்று டிரைவர், கண்டக்டர் ஓய்வறை, வாகனங்களை கழுவும் இடம், கழிவறையை பார்வையிட்டார். மயிலாடுதுறையில் உள்ள 2 திரையரங்குகளில் தமிழக அரசின் சாதனை விளக்க செய்தி ஒளிபரப்பு செய்யப்படுகிறதா? கழிவறைகள் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா? என்பது குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது உதவி கலெக்டர் யுரேகா, தாசில்தார் மகேந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story