18 வயதிற்குட்பட்டவர்கள் இருக்கிறார்களா? - மதுரை சிறைகளில் அதிகாரிகள் ஆய்வு


18 வயதிற்குட்பட்டவர்கள் இருக்கிறார்களா? - மதுரை சிறைகளில் அதிகாரிகள் ஆய்வு
x

18 வயதிற்குட்பட்டவர்கள் இருக்கிறார்களா? என்று மதுரை சிறைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மதுரை


மதுரை மத்திய சிறைச்சாலை மற்றும் திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூர் ஆகிய இடங்களில் உள்ள கிளைச்சிறைச்சாலைகளில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுந்தர் தலைமையில் இளைஞர் நீதிக்குழும உறுப்பினர்கள் பாண்டியராஜா, சரண்யா, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சரவணக்குமார், நன்னடத்தை அலுவலர் ராஜ்குமார் மற்றும் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் குருபிரசாத் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

கடந்த 2 தினங்களாக நடந்த இந்த ஆய்வில், 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் யாராவது சிறையில் இருக்கிறார்களா? தண்டனை பெற்றவர்களில் யாராவது 18 வயதிற்குட்பட்டவர்கள் இருந்தால், அவர்களுக்கு கல்வி, ஆற்றுப்படுத்துதல், ஆலோசனை, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவையுள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.


Related Tags :
Next Story