திருச்செந்தூர் கோட்டத்தில் திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்


திருச்செந்தூர் கோட்டத்தில் திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்
x

திருச்செந்தூர் கோட்டத்தில் திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோட்ட மின் விநியோக செயற் பொறியாளர்‌ விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகநேரி, சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி பகுதிகளில் சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள், மின்பாதைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல், சேதமடைந்துள்ள இழுவை கம்பிகளை சீரமைத்தல், தொய்வாக உள்ள மின்பாதைகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

எனவே, சிவந்திநகர், ஜெயந்தி நகர், சங்கிவிளை, ராமசாமிபுரம், எல்லப்பநாயக்கன்குளம், கோகுல் நகர், அடைக்கலாபுரம், நா.முததையாபுரம், நாலுமூலைக்கிணறு, பிச்சிவிளை, தண்டுபத்து, ஜீவன்நகர், காயல்பட்டினம், அருணாச்சலபுரம், கொம்புத்துறை, சிங்கித்துறை, நல்லூர், சோனகன்விளை, வள்ளிவிளை, அம்மன்புரம், அடப்புவிளை, சாமிதோப்பு, கோமநேரி, கலுங்குவிளை, துவர்க்குளம், நெடுங்குளம், தேரிப்பனை, வைத்தியலிங்கபுரம், பிடாநேரி, தைலாபுரம, வாலசுப்பிரமணியபுரம் திருமறையூர், மார்க்கெட் ரோடு, திரவியபுரம், வெள்ளமடம், சின்னமதிகூடல், சின்னமாடன்குடியிருப்பு, குறிப்பன்குளம், உடையார்குளம், குரங்கனி, மஞ்சள்விளை, தென்திருப்பேரை, வாணியங்காவிளை, ஆனையூர், ராமசுப்பிரமணியபுரம், பரமன்குறிச்சி ரோடு, தேரியூர், எம்.ஜி.ஆர் நகர், வெள்ளாளன்விளை, தேரியூர், ஞானியார்குடியிருப்பு, மாதவன்குறிச்சி, படுக்கப்பத்து மெயின்ரோடு, படுக்கப்பத்து பிஎஸ்என்எல் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், பூச்சிக்காடு, மற்றும் பனைவிளை ஆகிய பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story