திருச்செந்தூர் கோட்டத்தில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருச்செந்தூர் கோட்டத்தில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோட்ட மின் விநியோக செயற் பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட கல்லாமொழி உபமின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேசபுரம் மற்றும் உடன்குடி அனல் மின்நிலைய பகுதிகளுக்கு நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.
அதேபோல், திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகநேரி, சாத்தான்குளம், நாசரேத் மற்றும் உடன்குடி பகுதிகளில் சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள் மின்பாதைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல், சேதமடைந்துள்ள இழுவை கம்பிகளை சீரமைத்தல், தொய்வாக உள்ள மின்பாதைகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
எனவே, அடைக்கலாபுரம், தெற்கு பரமன்குறிச்சி, காயல்பட்டிணம் பஸ்நிலையம், தைக்காதெரு, விசாலாட்சியம்மன் கோவில் தெரு, முஸ்ஸிலீம் தெரு, நாலுமாவடி, வீரமாணிக்கம், குட்டிதோட்டம், பொத்தக்காலன்விளை, நரையன்குடியிருப்பு, செட்டிகுளம், திருவரங்கநேரி, நொச்சிகுளம், இளமால்குளம், கருங்கடல், பனைகுளம், மில்ரோடு, பிரகாசபுரம், கச்சனாவிளை, நவலெட்சுமிபுரம், சமத்துவபுரம், அடைக்கலாபுரம் (மெஞ்ஞானபுரம்), பஸ் நிலையம் ரோடு, கொத்துவாபள்ளி தெரு, நடுகாலன்குடியிருப்பு, சர்ச் தெரு, கடாச்சபுரம், வாலகுருசாமி கோவில் தெரு, வேதக் கோவில் தெரு, மற்றும் பிள்ளைவிளை ஆகிய பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.