திருச்செந்தூர் கோட்டத்தில் புதன்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்


திருச்செந்தூர் கோட்டத்தில் புதன்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்
x

திருச்செந்தூர் கோட்டத்தில் புதன்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோட்ட மின் வினியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகநேரி, சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி பகுதிகளில் சீரான மின்வினியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள், மின்பாதைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல், சேதமடைந்துள்ள இழுவை கம்பிகளை சீரமைத்தல், தொய்வாக உள்ள மின்பாதைகள் போன்ற பணிகள் இன்று (புதன்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் ஆலந்தலை, கல்லாமொழி, சண்முகபுரம், முத்து நகர், காந்திநகர், பிச்சிவிளை, நா.முத்தையாபுரம், நாலுமூலைக்கிணறு, சிங்கித்துறை, சதுக்கை தெரு, நைனார் தெரு, தெற்கு ஆத்தூர், பரதர் தெரு, புன்னக்காயல் ரோடு, முஸ்லிம் தெரு, நாலுமாவடி, வீரமாணிக்கம், புறையூர், அமராவதிகுளம், புளியடி மாரியம்மன் கோவில் தெரு, விரிகோட்டார் தெரு, வேலவன்புதுக்குளம், நெடுங்குளம், கோமாநேரி, கலுங்குவிளை, அறிவான்மொழி, சமத்துவபுரம், பிடாநேரி, செம்பூர், தவசிநகர், மணல்குண்டு, மானாட்டூர், அடைக்கலாபுரம் (மெஞ்ஞானபுரம்), வேப்பங்காடு, வீரவநல்லூர், ராமசாமிபுரம், புதுமனை புதுத்தெரு, புதுமனை பள்ளிவாசல்தெரு, ஒண்டிவீரன் நகர், வில்லிகுடியிருப்பு, முத்துகிருஷ்ணாபுரம், அருணாசலபுரம், கருமாவிளை, சுண்டங்கோட்டை, உடைபிறப்பு, அம்பாள்குளம், பிரகாசபுரம், மேல்நடுவைக்குறிச்சி, இடச்சிவிளை, பூச்சிக்காடு, பெருமாள்புரம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story