நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
மதுரை
வாடிப்பட்டி,
சமயநல்லூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் சேந்தமங்கலம் மற்றும் தேவசேரி பீடர், வாடிப்பட்டி துணை மின் நிலையத்தில் ராயபுரம் பீடர்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இதனால் மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிபட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், உசிலம்பட்டி, முடுவார்பட்டி, குறவன்குளம், ஆதனூர், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி சோழவந்தான் மோகன் பிளாட், ரிஷபம், திருமால் நத்தம், ஆலங்கட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிபட்டி பங்களா பகுதியில் மின்தடை ஏற்படும் என்று சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story