2 வீடுகளில் திருடிய தொழிலாளி கைது
திருப்பூர்
அவினாசி பழங்கரை ஊராட்சி கமிட்டியார் காலனியை சேர்ந்தவர் சாமிநாதன். ஓய்வு பெற்ற நில அளவையாளர். இவரது மனைவி ருக்மணி. இவர்களது வீட்டின் கதவை உடைத்து பிரோவிலிருந்த ரூ. 40 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். அதுபோல் அதே தெருவில் வசித்து வந்த சாமிநாதனின் மகளான ஆசிரியை கோகிலவாணி வீட்டின் கதவை உடைத்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்த ரூ. 38ஆயிரத்தை திருடி சென்றனர். இந்த திருட்டு தொடர்பாக திருப்பத்தூரை சேர்ந்த கட்டிட தொழிலாளி திருமால் (வயது 34) என்பரை போலீசார் கைது செய்தனர். இவர் ஏற்கனவே பெருமாநல்லூரில் ஒரு வீட்டில் 32 பவுன் நகை திருடிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியில் வந்தவர் என போலீசார் தெரிவித்தனர். அவரிடமிருந்து ரூ.20 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story