தகராறில் தொழிலாளி சாவு; சிறுவன் கைது


தகராறில் தொழிலாளி சாவு; சிறுவன் கைது
x
திருப்பூர்

பல்லடம்:


பல்லடம் அருகே உள்ள ஆறாக்குளம் பகுதியை சேர்ந்தவர் வலுப்பூரான்(வயது 38). விசைத்தறி தொழிலாளி. இவருடைய தந்தை வெள்ளிங்கிரி கடந்த 4-ந் தேதி மாரணம் அடைந்தார். இதையடுத்து அவருடைய உடலை உறவினர்கள் அடக்கம் செய்து விட்டு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வலுப்பூரானுக்கும் மற்ெறாவருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வலுப்பூரான் கீழே விழுந்து தலையில் காயம் அடைந்தார். இதையடுத்து அவரது மனைவி அவரை அழைத்துக்கொண்டு, மருத்துவமனைக்கு செல்லலாம் என்று கூறியபோது அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து கணவரை அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார்.பின்னர் தூங்கி விட்டனர். இந்த நிலையில் மறுநாள் காலை எழுந்து பார்த்த போது வலுப்பூரான் இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து சிறுவர் சீர் திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story