பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது


பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது
x
திருப்பூர்


பல்லடம், மங்கலம் ரோடு இளங்கோ வீதியைச் சேர்ந்த கோபால் மனைவி கீதா கோவிலுக்கு சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் முகவரி கேட்பது போல் நடித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 5½ சவரன் தங்க தாலிக்கொடி மற்றும் 2 பவுன்நகை ஆகியவற்றை பறித்துக் தப்பி சென்றனர்.இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில் போலீசார் நேற்று பனப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த சின்னய்யா என்பவரது மகன் லோகேஸ்வரன்(வயது 33), கீதாவிடம் நகையை பறித்து சென்றவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவன் மற்றொரு வழக்கில் பழனி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் உள்ளான் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story