தொழிலாளியை தாக்கியவர் ைகது
திருப்பூர்
பெருமாநல்லூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கட்டிட பணிக்காக 20-க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பாலு என்பவர் மேஸ்திரி தனக்கு கொடுக்க வேண்டிய பாக்கி பணத்தை கொடுக்காததால் மற்றவர்களிடம் மது போதையில் மேஸ்திரியை தவறாக பேசியுள்ளார். அருகிலிருந்த சிவா என்பவர் மேஸ்திரிக்கு ஆதரவாக பேசினார்.
இதனால் பாலுவுக்கும் சிவாவுக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டது. இதில் பாலு அங்கிருந்த கம்பியால் சிவாவின் காலில் தாக்கினார். சிவா உடனடியாக சிகிச்சைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பவைக்கப்பட்டார். இது குறித்து மேஸ்திரி பன்னீர்செல்வம் அளித்த புகாரின் பேரில் சிவாவை தாக்கிய கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பாலு என்பவரை பெருமாநல்லூர் ்போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story