300 கிலோ ரேஷன் அரிசியுடன் வாலிபர் கைது
திருப்பூர்
திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில் ரேஷன் பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் தடுப்பு தொடர்பாக சோதனை மேற்கொண்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசியுடன் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் திருச்சி தாராநல்லூரை சேர்ந்த ஏழுமலை (வயது 33) என்பதும், ஆத்துப்பாளையம் பகுதியில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைந்தவிலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. அவரிடம் இருந்து 300 கிலோ ரேஷன் அரிசி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து ஏழுமலையை கைது செய்தனர்.
Next Story