5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையத்தை சேர்ந்த ரங்கசாமி என்பவரது மகன் சுப்பிரமணியம் (வயது 25). இவர் கடந்த 2017-ம் ஆண்டு அந்தப் பகுதியில் நடந்த அடி-தடி பிரச்சினையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியத்தை தேடி வந்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்காமல் 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார்.
இந்த நிலையில் சுக்கம்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த சுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire