ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம்


ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம்
x

வாணியம்பாடியில் ஆக்கிரமித்து கட்டிய கடைகளை இடித்தபோது வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து வெளியே தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்

வாணியம்பாடியில் ஆக்கிரமித்து கட்டிய கடைகளை இடித்தபோது வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து வெளியே தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்கிரமிப்பு கடைகள்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தனி நபர் ஒருவர் கடைகளை கட்டி முன்பணம் ரூ.10 லட்சம் பெற்றுக்கொண்டு கடந்த 40 ஆண்டுகளாக மாத வாடகைக்கு விட்டுள்ளார். இது குறித்து நகராட்சி கணக்கெடுப்பு செய்து அங்கு இயங்கி வரும் பேக்கரி, செல்போன் கடை, பெட்டிக்கடை ஆகிய 3 கடைகளை அகற்றிக் கொள்ள நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை கூறியும் கடைகளை அகற்றவில்லை.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கடைகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டும் அகற்றாமல் இருந்தனர். அதைத்தொடர்ந்து நேற்று பொக்லைன் எந்திரங்களுடன் நகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று கடைகளை இடிக்க முயன்றனர்.

வலுக்கட்டாயமாக

அப்போது கடை நடத்தி வருபவர்கள் கடைகளை அப்புறப்படுத்த விடாமல் அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாரை வரவழைத்து கடையில் இருந்த பெண் உட்பட அனைவரையும் வலுக்கட்டாயமாக இழுத்து வெளியே தள்ளி கடையில் இருந்த அனைத்து பொருட்களையும் அப்புறப்படுத்தி சாலையில் வைத்துவிட்டு, கடைகளை இடித்து தரைமட்டம் ஆக்கினர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.


Next Story