காதணி விழாவில் தகராறு; ஒருவர் மீது தாக்குதல்


காதணி விழாவில் தகராறு; ஒருவர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 9 April 2023 12:15 AM IST (Updated: 9 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பூதலூரில் காதணி விழாவில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் தாக்கப்பட்டார்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி:

பூதலூர் பிரதான சாலையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் ஆவாரம்பட்டியை சேர்ந்த ஒருவரது குழந்தைகளின் காதணி விழா நடந்தது. இதில் உணவு பரிமாறப்பட்ட போது கறி (இறைச்சி) வைப்பதில் தகராறுஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அதே ஊரைச் சேர்ந்த வீரமணி, முருகேசன், மகேந்திரன் (வயது31), மதியழகன் (50) ஆகிய 4 பேரும் சேர்ந்து ஆவாரம்பட்டி கக்கன் காலனியை சேர்ந்த ராஜேந்திரன் (54) என்பவரை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர். தாக்குதலில் காயமடைந்த ராஜேந்திரன் பூதலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.இதுகுறித்த புகாரின் பேரில் பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜகஜீவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரன், மதியழகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய வீரமணி, முருகேசனை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story