காங்கிரஸ் கூட்டத்தில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம்


காங்கிரஸ் கூட்டத்தில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம்
x

திருப்பத்தூர் மாவட்ட நகர, ஒன்றிய காங்கிரஸ் நிர்வாகிகள் வேட்பாளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம், கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட நகர, ஒன்றிய காங்கிரஸ் நிர்வாகிகள் வேட்பாளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம், கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

காங்கிரஸ் கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நகர, ஒன்றிய நிர்வாகிகள் வேட்பாளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி திருப்பத்தூர் ெரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள அரிமா சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ச.பிரபு தலைமை வகித்தார். கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர் மகாலிங்கம் கலந்து கொண்டு பேசி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி பேசியபோது தேர்தல் சம்பந்தப்பட்டதை விட்டு வேறு எதுவும் பேசக்கூடாது என சிலர் கூச்சலிட்டனர். அதற்கு மாவட்ட தலைவர் பிரபு ஆதரவாளர்கள் எதிர்த்து கூச்சலிட்டனர்.

கூச்சல் குழப்பம்

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனால் அங்கு கூச்சல் குழப்பம் நிலவியது. உடனடியாக மேடையில் இருந்தவர்கள் இரு பிரிவினரையும் சமாதானம் செய்தனர்.

கூட்டத்தில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சாய்வெங்கடேஷ், ஏலகிரி செல்வம், பி.கணேஷ்மல், கிஷோர்பிரசாத், கே.வி.வெங்கடேசன், நெடுமாறன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story