பணிகளின் விவரங்களை கேட்டு கிராமசபை கூட்டத்தில் வாக்குவாதம்
விரிஞ்சிபுரம் ஊராட்சியில் செய்யப்பட்டுள்ள பணிகள்குறித்து கிராமசபை கூட்டத்தில் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அதிகாரிகள் வெளியேறினர்.
கிராமசபை கூட்டம்
விரிஞ்சிபுரம் ஊராட்சியில் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரி பாலசுந்தரம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகரன், சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் தீர்மானங்களை வாசித்தார்.
அப்போது 15 ஆண்டுகளாக ஊராட்சியில் செயல்படுத்தப்படாத பல திட்டங்களை ஊராட்சி மன்ற தலைவர் செயல்படுத்தி உள்ளார். மேலும் திருமண மண்டபங்கள், கடைகள், வீடு உள்ளிட்டவைகளுக்கு ஊராட்சி சார்பாக வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.41 லட்சத்திற்கு வரி வசூல் செய்யப்பட்டதாக தீர்மானம் வாசிக்கப்பட்டது.
வாக்கு வாதம்
இதற்கு வார்டு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வசூல் செய்யப்பட்ட ரூ.41 லட்சத்தில் என்னென்ன பணிகள் செய்யப்பட்டுள்து என்பது குறித்து செலவு செய்ததற்கான ரசீதுகளை கிராம சபை கூட்டத்தில் வைக்குமாறு வலியுறுத்தினர். இதனால் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகரன், சாந்தி ஆகியோர் கூட்டத்தை விட்டு வெளியேறினர்.
உடனே கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது அதிகாரி கூட்டத்தை விட்டு வெளியேறுவது என்ன நியாயம் என்று கேட்டு அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன் மட்டும் மீண்டும் கூட்டத்தில் கலந்து கொண்டார். சாந்தி ஆசனம்பட்டில் ஒரு பிரச்சினை இருப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனை அடுத்து வீடு கட்டுவதற்கு அனுமதி பெற்ற பயனாளிகளின் பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதனால் தொடர்ந்து மீண்டும் கூச்சல் குழப்பம் நிலவியது.
குற்றச்சாட்டு
தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றாமல் தலைவர் தன்னிச்சையாக செயல்படுவதாக, ரார்டு உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். இதற்கு வார்டு உறுப்பினர்களின் ஒப்புதலுடனே அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகிறது, அனைத்து திட்டங்களும்