கண்கள் கூசும்படி காரின் முகப்பு விளக்கை ஒளிர விட்டதால் தகராறு - இளைஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல்
கண்கள் கூசும்படி காரின் முகப்பு விளக்கை ஒளிர விட்டதால் இரண்டு இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்கள் கூசும்படி காரின் முகப்பு விளக்கை ஒளிர விட்டிருந்ததால் ஏற்பட்ட தகராறில் இருவரை தெருவுக்குள் புகுந்து தாக்கியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பூவாணி கிராமத்தில் உள்ள அருந்ததியர் காலனியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சாதிப் பெயர் கூறி திட்டி, தாக்கப்பட்ட கண்ணன் மற்றும் சின்னத்தம்பி ஆகிய இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக எட்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story