மீன் பிடித்தபோது தகராறு: வீட்டிற்கு தீவைத்த 2 பேர் மீது வழக்கு


மீன் பிடித்தபோது தகராறு: வீட்டிற்கு தீவைத்த 2 பேர் மீது வழக்கு
x

மீன் பிடித்தபோது ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டிற்கு தீவைத்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுக்கோட்டை

திருமயம் அருகே உள்ள நமணசமுத்திரம் சக்தி நகரை சேர்ந்தவர் பரமசிவம். இவருடைய மகன் சஞ்சய் (வயது 20). இவர் அப்பகுதியில் உள்ள இளங்குடி கண்மாயில் மீன் பிடித்தபோது மேலதேமுத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த குண்டு கார்த்தி, நமணசமுத்திரம் குமரேசன் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குண்டு கார்த்தி, குமரேசன் ஆகியோர் சஞ்சய் வீட்டுக்கு சென்று அவரை தாக்கியதோடு வீட்டிற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் வீட்டில் வைத்திருந்த பொருட்கள் எரிந்து நாசமானதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து சஞ்சய் அளித்த புகாரின் பேரில் நமணசமுத்திரம் போலீசார் குண்டு கார்த்தி, குமரேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story