கோவில் திருவிழாவில் மஞ்சள் நீராட்டின்போது தகராறு; 2 பேர் மீது வழக்கு
கோவில் திருவிழாவில் மஞ்சள் நீராட்டின்போது தகராறு; 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நச்சலூர் அருகே உள்ள தென்னகர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாவி (வயது62). இவரது ஊரில் நேற்று கோவில் திருவிழாவில் மஞ்சள் நீராடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது தனது வீட்டின் அருகே அண்ணாவி நின்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த குணா, கலியமூர்த்தி ஆகியோர் சாக்கடை நீரை எடுத்து அண்ணாவி வீட்டின் மீது தெளித்ததாக கூறப்படுகிறது.
இதனை குறித்து அண்ணாவி கேட்டபோது, 2 பேரும் தகாத வார்த்தையால் திட்டி அவரை அடிக்க முயன்றுள்ளனர். அப்போது சத்தம் கேட்டு வீட்டில் இருந்து அண்ணாவியின் மகன் கணேசன், அவரது மனைவி பூமணி ஆகிேயார் வந்து தாக்க வந்த 2 பேரையும் தடுத்துள்ளனர். அப்போது அவர்கள் பூமணியை கையால் அடித்தும், கணேசனை கையில் வைத்திருந்த கட்டையால் தாக்கி உள்ளனர்.
இதையடுத்து காயம் அடைந்த கணேசன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து அண்ணாவி கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் குணா, கலியமூர்த்தி ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.