பயணிகளை ஏற்றுவதில் அரசு டவுன் பஸ் டிரைவர்-கண்டக்டரிடம் வாக்குவாதம்


பயணிகளை ஏற்றுவதில் அரசு டவுன் பஸ் டிரைவர்-கண்டக்டரிடம் வாக்குவாதம்
x

பயணிகளை ஏற்றுவதில் அரசு டவுன் பஸ் டிரைவர்-கண்டக்டரிடம் வாக்குவாதம் ஏற்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வி.களத்தூருக்கு நேற்று காலை 10 மணியளவில் அரசு டவுன் பஸ் ஒன்று பயணிகளுடன் புறப்பட்டது. பெரம்பலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக பஸ்சை டிரைவர் நிறுத்த மெதுவாக இயக்கினார். அப்போது அதே சாலையில் திருச்சியில் இருந்து பெரம்பலூர் வழியாக பூலாம்பாடிக்கு செல்லும் தனியார் பஸ் வேகமாக வந்து, முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை முந்திச்சென்று பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்ற முயன்றனர். ஆனால் அரசு டவுன் பஸ்சில் மகளிருக்கு கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என்பதால் பெண் பயணிகள் தனியார் பஸ்சை புறக்கணித்து, பின்னால் நின்ற அரசு டவுன் பஸ்சில் ஏற முயன்றனர். இதனை கண்ட தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் கீழே இறங்கி வந்து, அரசு டவுன் பஸ்சை சிறை பிடித்து, அதன் டிரைவர், கண்டக்டரிடம் பயணிகளை ஏற்றக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பயணிகள் 2 பஸ்களின் டிரைவர்கள், கண்டக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.


Next Story