பெண்ணிடம் தகராறு
நீடாமங்கலம் அருகே பெண்ணிடம் தகராறு செய்த வாலிபர் கைது
திருவாரூர்
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் அருகே உள்ள பரப்பனாமேடு கிராமம் நடுத்தெருவை சேர்ந்த ஒரு பெண் சம்பவத்தன்று இரவு தனது மகனை இயற்கை உபாதை கழிக்க வீட்டின் வெளியே அழைத்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மனோஜ் (19) திடீரென அந்த பெண்ணின்
வாயை பொத்தி அவரை இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் சத்தம் போட்டார். உடனே வீ்ட்டில் இருந்து வெளியே வந்த அந்த பெண்ணின் கணவர் இதை தட்டிக்கேட்டார். அப்போது மனோஜ் மற்றும் அவரது தம்பி அந்த பெண்ணின் கணவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
Related Tags :
Next Story