அரிமளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தேரோட்டம்


அரிமளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தேரோட்டம்
x

ஆனி திருமஞ்சன விழாவையொட்டி அரிமளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

அரிமளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது. இதையொட்டி சிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வர நடராஜருக்கு பால், வெண்ணெய், திரவிய பொடி, பழச்சாறு உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சிதம்பரேஸ்வரர் நடராஜரை பக்தர்கள் தேரில் வைத்து சிவன் கோவிலின் முக்கிய வீதிகள் வழியாக பெண்கள் மட்டும் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். இதனை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.


Next Story