அரியலூர் ஒன்றியக்குழு கூட்டம்


அரியலூர் ஒன்றியக்குழு கூட்டம்
x

அரியலூர் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

அரியலூர்

தாமரைக்குளம்:

அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழு தலைவர் செந்தமிழ்செல்வி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சரஸ்வதி ராமஜெயவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருளப்பன், செந்தில்குமார், மேலாளர் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஒன்றியத்தில் நிதி ஒதுக்கி செய்யப்படும் வேலை குறித்து அந்தந்த ஒன்றியக்குழு உறுப்பினரிடம், தலைவர் தெரிவிக்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு, மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடைக்காலம் என்பதால் கிராம ஊராட்சிகளில் பற்றாக்குறையின்றி தண்ணீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


Next Story