மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை தமிழக அரசு மூடி மறைக்கிறது- அர்ஜூன் சம்பத்


மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை  தமிழக அரசு மூடி மறைக்கிறது- அர்ஜூன் சம்பத்
x

மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை தமிழக அரசு மூடி மறைக்கிறது என அர்ஜூன் சம்பத் குற்றம் சாட்டி உள்ளார்.

தஞ்சாவூர்

மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை தமிழக அரசு மூடி மறைக்கிறது என அர்ஜூன் சம்பத் குற்றம் சாட்டி உள்ளார்.

அர்ஜூன் சம்பத் பேட்டி

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு உரிய அதிகாரத்தை தி.மு.க. அரசு கொடுக்கவில்லை. எனவே கிராமிய பிரதிநிதிகளுக்கு நேரடி அதிகாரம் கொடுக்கும் பஞ்சாயத்து ராஜ் கொள்கைக்கு நேர் எதிராக தி.மு.க.வினர் செயல்படுகிறார்கள். போராட்டத்துக்கு அனுமதி வழங்குவதில் இந்து அமைப்புகளுக்கும், முஸ்லிம் அமைப்புகளுக்கும் போலீசார் பாரபட்சம் காட்டுகின்றனர்.

அரசாங்கம் பல விவகாரங்களில் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்கிறது. மத்திய அரசு ஏழை மக்களுக்காக அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்களை குறைந்த விலையிலும், இலவசமாகவும் வழங்குகிறது.

மூடி மறைக்கிறது

அத்துடன் குடிநீர் திட்டங்கள், விவசாயிகளுக்கான வேளாண்மை நிதி உதவி திட்டங்கள், தரமான குடிநீர் கிடைக்க ஜல்ஜீவன் திட்டம் என பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக ஏராளமான நிதியை மாநில அரசுக்கு, மத்திய அரசு ஒதுக்குகிறது. இந்த நிதியை தமிழக அரசு பயன்படுத்திக்கொள்வதுடன், நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு தாமதப்படுத்துகிறது என போலியாக குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாக குடிநீர் திட்டத்திற்காக தமிழக அரசுக்கு மத்திய அரசு ரூ.19 கோடியை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒதுக்கியது. இவற்றையெல்லாம் தமிழக அரசு மூடி மறைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story