திரவுபதி அம்மன் கோவிலில் அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி


திரவுபதி அம்மன் கோவிலில் அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி
x

சாலவேடு கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமத்தில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது. இதில் 15 நாட்களாக மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிலையில் அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நாடக கலைஞர்கள் அர்ஜுனன் வேடம் அணிந்து கொண்டு பாடல்களை பாடிக் கொண்டு உயரமான மரத்தில் ஏறி மகாபாரதம் எப்படி நடைபெற்றது என்று தத்துரூபமாக நடித்து காண்பித்தனர்.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story