ஆயுதப்படை பெண் போலீஸ் சாதனை
மண்டல விளையாட்டு போட்டி: ஆயுதப்படை பெண் போலீஸ் சாதனை
தமிழக போலீசாருக்கான 2022-ம் ஆண்டுக்கான மண்டல ஜுடோ, வூசு, டேக்வாண்டா, ஜிம்னாஸ்டிக், கராத்தே போன்ற விளையாட்டு போட்டிகள் சென்னை ஆவடியில் நடந்தது. இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து போலீசார் பங்கேற்று விளையாடினர். தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த பெண் போலீஸ் கிருஷ்ணவேணி டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொண்டு விளையாடினார். அவர் 46 கிலோ எடை பிரிவில் முதல் இடம் பிடித்து தங்க பதக்கத்தை வென்றார். மேலும் வருகிற 19-ந் தேதி டெல்லியில் நடைபெறும் 7-வது அனைத்து இந்திய போலீஸ ்துறை ஜூடோ கிளஸ்டர் போட்டியில் தமிழக போலீஸ் துறை சார்பில் கலந்து கொள்ள தேர்ச்சி பெற்று உள்ளார். சாதனை படைத்த பெண் போலீஸ் கிருஷ்ணவேணியை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிசு வழங்கி பாராட்டினார். அப்போது, ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து உடன் இருந்தார்.