இரண்டாவது நாளாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு


இரண்டாவது நாளாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 19 April 2023 12:15 AM IST (Updated: 19 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகளுக்கு இரண்டாவது நாளாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

மயிலாடுதுறை

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் கோவிலில் வருகிற மே 24-ந் தேதி (புதன்கிழமை) குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு யாகசாலை அமைப்பதற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பொக்லின் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்பொழுது பூமிக்கடியில் அம்பாள், திருஞானசம்பந்தர், முருகன், சண்முகநாதர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட 22 ஐம்பொன் சிலைகளும், 100-க்கும் மேற்பட்ட பூஜை பொருட்களும், 462 செப்பேடுகளும் கண்டெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தருமபுரம் ஆதீனம், மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆகியோர் முன்னிலையில் சட்டைநாதர் கோவில் வளாகத்தில் பாதுகாப்பான அருகில் வைக்கப்பட்டு ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் இரண்டாவது நாளாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் சிலைகள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறையின் முன்பு உதவி கலெக்டர் அர்ச்சனா, சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாமேக் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்பொழுது சிலைகள் வைக்கப்பட்ட அறைக்கு போதிய பாதுகாப்பு உள்ளதா எனவும் 24 மணி நேரமும் மின்சார வசதி உள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பாக அறையில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை பார்த்த வண்ணம் செல்கின்றனர்.


Next Story