ஆயுதப்படை போலீசார்115 பேர் போலீஸ் நிலையங்களில் பணி நியமனம்
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை போலீசார் 115 பேர் போலீஸ் நிலையங்களில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வரும் 115 போலீசார் தாலுகா போலீஸ் நிலையங்களில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
இதற்கான கவுன்சிலிங் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், தூத்துக்குடி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், மாவட்ட போலீஸ் அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரி குமார், அலுவலக கண்காணிப்பாளர் மாரியப்பன் ஆகியோர் அடங்கிய குழுவினர் முன்னிலையில் நடந்தது.
இதில் காலிப்பணியிடங்களின் அடிப்படையிலும், பதவி மூப்பு அடிப்படையிலும், அவர்கள் விருப்பப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு பணி நியமனம் செய்யப்பட்டனர்.
அதன்படி தூத்துக்குடி உட்கோட்டத்துக்கு 13 போலீசாரும், ஊரக உட்கோட்டத்துக்கு 5 போலீசாரும், திருச்செந்தூர் உட்கோட்டத்துக்கு 34 போலீசாரும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்துக்கு 12 போலீசாரும், கோவில்பட்டி உட்கோட்டத்துக்கு 14 போலீசாரும், மணியாச்சி உட்கோட்டத்துக்கு 12 போலீசாரும், விளாத்திகுளம் உட்கோட்டத்துக்கு 18 போலீசாரும், சாத்தான்குளம் உட்கோட்டத்துக்கு 7 போலீசாரும் ஆக மொத்தம் 115 பேர் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.