பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு: செங்கல்பட்டு ஆயுதப்படை போலீஸ்காரர் ஆஜராகி சாட்சியம் மீண்டும் விசாரணை நாளை மறுநாளுக்கு ஒத்திவைப்பு


பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு:    செங்கல்பட்டு ஆயுதப்படை போலீஸ்காரர் ஆஜராகி சாட்சியம்    மீண்டும் விசாரணை நாளை மறுநாளுக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக விழுப்புரம் கோர்ட்டில் செங்கல்பட்டு ஆயுதப்படை போலீஸ்காரர் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

விழுப்புரம்


பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கின் புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணையை நிறைவு செய்ததை தொடர்ந்து இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. மேலும் இவ்வழக்கில் நேற்று அரசு தரப்பு சாட்சியான செங்கல்பட்டு ஆயுதப்படை போலீஸ்காரர் ரமேஷ் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரது சாட்சியம் முடிந்ததும் செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்தார். இந்த சாட்சியம் மற்றும் குறுக்கு விசாரணை முழுவதையும் நீதிபதி புஷ்பராணி பதிவு செய்துகொண்டார். தொடர்ந்து, இவ்வழக்கின் விசாரணையை நாளை மறுநாளுக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.


Next Story