தஞ்சையில் பள்ளிவாசலுக்குள் நுழைந்து இமாமை தாக்கிய ராணுவ வீரர் கைது செய்யப்பட்டாா்.

தஞ்சையில் பள்ளிவாசலுக்குள் நுழைந்து இமாமை தாக்கிய ராணுவ வீரர் கைது செய்யப்பட்டாா்.
x

தஞ்சையில் பள்ளிவாசலுக்குள் நுழைந்து இமாமை தாக்கிய ராணுவ வீரர் கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சையில் பள்ளிவாசலுக்குள் நுழைந்து இமாமை தாக்கிய ராணுவ வீரர் கைது செய்யப்பட்டாா்.

தொழுகை

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே பாஸ்கரபுரத்தில் பள்ளிவாசல் உள்ளது. கடந்த 14-ந் தேதி மாலையில் இந்த பள்ளிவாசல் ஒலிப்பெருக்கியில் தொழுகைக்கான அழைப்பு (பாங்கு) கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்த ஒருவர், தனது செல்போனில் இருந்து ஹரே கிருஷ்ணா ஜெய் ஸ்ரீ ராம் என்ற பாடலை பள்ளிவாசல் மைக்கில் ஒலிபரப்புமாறு பிரச்சினை செய்தார். இதனை தட்டி கேட்ட பள்ளிவாசல் இமாம் ஜெயினுலாபுதீனை அந்த நபர் தாக்கினார்.

கைது

இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பள்ளிவாசலுக்கு அத்துமீறி நுழைந்து இமாமை தாக்கியவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ரகுமான் நகர் 4-ம் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ராஜா (வயது35) என்பது தெரிய வந்தது.மேலும் இவர், அசாம் மாநிலத்தில் ராணுவத்தில் வேலை பார்த்து வந்ததும், தற்போது விடுமுறையில் வந்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து ராஜாவை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Next Story