தம்பியை கம்பியால் தாக்கிய ராணுவ வீரர் கைது


தம்பியை கம்பியால் தாக்கிய ராணுவ வீரர் கைது
x

தம்பியை கம்பியால் தாக்கிய ராணுவ வீரர் கைது

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டார் அருகே உள்ள ஆற்றூர் பொடுவல்தறவிளையைச் சேர்ந்த ரங்கதுரை (வயது 41). இவர் டெல்லியில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவருடைய தம்பி பெனட் (33), தொழிலாளி. அண்ணன், தம்பிக்கு இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. கடந்த சில வாரங்களுக்க்கு முன்பு ரங்கதுரை விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பெனட் வீட்டு முன் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ரங்கதுரை அவரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இதில் படுகாயமடைந்த பெனட் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ரங்கதுரை மீது திருவட்டார் சப்-இன்ஸ்பெக்டர் ஞானதாஸ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.


Next Story