ஆரோட்டுப்பாறை அரசு பள்ளி அணி சாம்பியன்
மாவட்ட கபடி போட்டியில் ஆரோட்டுப்பாறை அரசு பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
கூடலூர்,
நீலகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்ட விளையாட்டு போட்டிகள் ஊட்டியில் நடைபெற்றது. முதலில் குறுவட்ட அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றன. கபடி போட்டியில் கூடலூர் கல்வி மாவட்ட அளவில் ஆரோட்டுப்பாறை அரசு உயர்நிலை பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர். தொடர்ந்து நீலகிரி மாவட்ட அளவிலான கபடி போட்டியில் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஆரோட்டுப்பாறை அரசு உயர்நிலை பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இதன் மூலம் அந்த அணி மாநில அளவிலான போட்டிக்கு நீலகிரி மாவட்டம் சார்பில் தகுதி பெற்றுள்ளது. இதைதொடர்ந்து 12 மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் நாகலிங்கம், உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தராஜ் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்பட அனைவரும் பாராட்டினர்.