நூல் விலை உயர்வை கண்டித்து மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
அனுப்பர்பாளையம்:
நூல் விலை உயர்வை கண்டித்து உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் கோபி வழிகாட்டுதலின்படி கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு நேற்றுகாலை நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் விஷ்ணுபிரியன் தலைமை தாங்கினார். மாநில அவைத்தலைவர் வைகோ மாரிமுத்து, துணை செயலாளர் முருகன், உயர்நிலைக்குழு உறுப்பினர் தெய்வீகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் நூல் விலை உயர்வு மற்றும் ஏற்றுமதியை கண்டித்தும், நெகிழி இல்லாத திருப்பூர் என்ற வகையில் பொதுமக்கள் அனைவரும் துணிப்பையை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதில் மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர்கள், மாநில உறுப்பினர்கள், மாவட்ட இளைஞரணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.