மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்
திருப்பூர், நவ.11-
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பிரிட்ஜ்வே காலனி அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நேற்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அந்த கடைமுன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர குழு உறுப்பினர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் கே.காமராஜ், வடக்கு நகர செயலாளர் பி.ஆர்.கணேசன், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயகிருஷ்ணன் மற்றும் மரிய சிசிலியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பிரிட்ஜ்வே காலனி அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Next Story