ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
திருப்பூர்


தாராபுரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தாராபுரம் தாசில்தார் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆ.மணியன் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் ரா.ஞானசேகரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது ஓய்வூதியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை நிலுவை இனங்கள் மற்றும் புகார்கள் மனுக்களின் மீதான விசாரணைகளை தாமதமின்றி முடிக்க வேண்டும். ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் என்ற நடைமுறை முற்றிலும் கைவிடப்படவேண்டும்.

கலெக்டர் தலைமையில் 2 மாதங்களுக்கு ஒரு முறை சீரான இடைவெளியில் ஓய்வூதியர் குறைதீர்வு கூட்டத்தினை நடத்தவேண்டும்.

வட்டார வளர்ச்சி அலுவலர்களின் ஊதிய நிர்ணயம் தொடர்பான அரசாணை எண் 417-ல் உள்ள குறைபாடுகளைக் களைந்து அனைவருக்கும் பயனளிக்கிற வகையிலும் ஓய்வூதியப்பலன்களுக்கு தனி ஊதியத்தை சேர்த்து கணக்கிடு வகையிலும் திருத்திய ஆணைகள் வெளியிட வேண்டும்.

அடையாள அட்டை

ஊராட்சி ஒன்றிய பணி ஓய்வூதியர்களுக்கு மருத்துவக்காப்பீடு திட்டம் செயல்படுத்த வெளியிடப்பட்ட அரசாணையை தாமதமின்றி விரைவாக அமல்படுத்திட வேண்டும். காப்பீட்டு திட்ட அடையாள அட்டை உடன் வழங்கவேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநில செயலாளர் ராஜகோபாலன் மற்றும் சங்க நிர்வாகிகள் கி.மேகவர்ணன், கி.சீரங்கராயன், க.சண்முகம், க.வெள்ளைச்சாமி, பீர்ஜாபர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பொ.நாகேஸ்வரன் நன்றி கூறினார்.


Next Story