விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நேற்று தாராபுரம் அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் நா. தமிழ்முத்து தலைமை தாங்கினார். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் நீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, தொடர்புடைய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., தமிழ் புலிகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, திராவிட கழகத்தினர், முஸ்லிம் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Next Story