கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
x
திருப்பூர்


காங்கயம் நகர பஸ் நிலைய வளாகத்தில் நேற்று மாலை புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் தமிழக கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர இளைஞர் முன்னணியின் காங்கயம் பொறுப்பாளர் கவி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி கொடிகளை பிடித்து, கோஷங்கள் எழுப்பினர். இதில் புரட்சிகர இளைஞர் முன்னணி, ம.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து அங்கு வந்த காங்கயம் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர இளைஞர் முன்னணியினர் 26 பேரை கைது செய்து வேனில் ஏற்றி காங்கயம் - திருப்பூர் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்று தங்க வைத்தனர்.பின்னர் விடுவித்தனர்.


Next Story