மத்திய அரசை கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி.  தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
திருப்பூர்


தாராபுரத்தில் ஏ.ஐ.டி.யூ.சி விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தாராபுரம் பஸ் நிலையம் அருகே ஏ.ஐ.டி.யூ.சி. விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே. சுப்பராயன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது 240 நாட்கள் பணி புரிந்தால் பணிநிரந்தரம், ரூ.21 ஆயிரத்திற்கு குறையாத மாத ஊதியம், நல வாரியங்களில் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரத்துக்கு குறையாத ஓய்வூதியம், நல வாரிய நிதி பயன்களை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

பின்னர் தாராபுரம் ஆர்.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக செல்ல முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஒரே இடத்தில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தும் படி கேட்டுக்கொண்டனர். இதனால் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கலந்துகொண்டனர்

இதில் ஏ.ஐ.டி.யூ.சி. விவசாய தொழிற்சங்க மாவட்ட தலைவர் பி.ரகுபதி, தாலுகா செயலாளர் லட்சுமணன், தாலுகா துணை செயலாளர் ரவி, ஒன்றிய செயலாளர் மலையாண்டி உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் இருந்து வந்த வாகனங்களை மாற்றுப்பாதையில் போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால் போக்குவரத்து பாதித்தது. ஆர்ப்பாட்டத்தையொட்டி தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், அன்புச்செல்வி, செல்லம் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story