தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
திருப்பூர்


காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் டி.மோகன் தலைமை தாங்கினார். இதில் சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வருவாய் கிராம உதவியாளர்களுக்கு இணையாக அகவிலைப்படியுடன் ரூ.6 ஆயிரத்து 750 மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட்டு சத்துணவு திட்டத்தில் இணைத்திட வேண்டுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story