கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
திருப்பூர்


தாராபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரம் வட்ட கிளை தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். புதிய பென்சன்திட்டத்தை ரத்துசெய்து பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டர்களை மீண்டும் வழங்க வேண்டும். பட்டப் படிப்பு படித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் வட்டக்கிளை செயலாளர் விவேக் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதுபோல் காங்கயம், தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் காங்கயம் வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். சங்கத்தின் நிர்வாகிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story