பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
திருப்பூர்


அவினாசி புதிய பஸ் நிலையம் எதிரில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் தேளி காளிமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. புறநகர் தலைவர் ஜி.பி.தாமோதரன், மாவட்ட இணை செயலாளர் எஸ்.ராஜா, பொருளாளர் பி.ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில துணைத்தலைவர் எஸ்.கர்ணன், மாநில பொதுச் செயலாளர் திருப்பதி, மாநில இளைஞரணி ஸ்ரீவை சுரேஷ் தேவர், மாநில தலைவர் நல்லமுத்து, மாநில பொருளாளர் மோகன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ஜெயராமன், முன்னாள் மத்திய குழு உறுப்பினர் ராஜசேகர், மத்திய குழு உறுப்பினர் வடிவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்கள்.

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ஏற்றம் மற்றும் அனைத்து விலைவாசி உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. முடிவில் அவினாசி ஒன்றிய செயலாளர் தேவராஜ் நன்றி கூறினார். டி.யூ.சி.சி. புறநகர் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், ஏ.ஒய்.எல். புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன், புறநகர் மாவட்ட மாணவரணி பிரபு, மாவட்ட தொண்டரணி செயலாளர் ராஜேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் வீரமணி, டி.யூ.சி.சி. மாவட்ட தலைவர் ராமேஷ், கலை இலக்கிய பிரிவு மாவட்ட செயலாளர் கவிஞர்.ஏ. அழகுபாண்டி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story