தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
திருப்பூர்


காங்கயம் தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று மாலை 5.30 மணியளவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராணி தலைமை தாங்கினார்.

இதில் காங்கயம் சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவில் அலுவலக கண்காணிப்பாளர் சி.சு.பால்ராஜ் மீது தாக்குதல் தொடுத்ததாக கூறப்படும் காவல்துறை ஆயுதப்படை சார்பு ஆய்வாளர் துரைசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதில் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story