ஏ.ஐ.டி.யு.சி. கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூர்
திருப்பூர் மாவட்டஏ.ஐ.டி.யு. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பாத்திர சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக உத்தரபிரதேச பா.ஜனதா எம்.பி.யான இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீது நடவடிக்கை கோரி டெல்லியில் மல்யுத்த வீரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் பி.ஆர்.நடராஜன், மாநில செயலாளர் சேகர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
Next Story