சேலத்துக்கு நாளை வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு-மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தகவல்


சேலத்துக்கு நாளை வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு-மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தகவல்
x

நாளை சேலம் வருகை தரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் கூறினார்.

சேலம்

ஆலோசனை கூட்டம்

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. அவைத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன், சக்திவேல், முன்னாள் மேயர் சவுண்டப்பன், பொருளாளர் பங்க் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பு ஏற்று உள்ளார். அவர், நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணிக்கு சேலம் வருகிறார். மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, சேலம் திருவாக்கவுண்டனூர் ரவுண்டானா அருகே மேள, தாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். நாம் கொடுக்கும் வரவேற்பு விழா தமிழகமே திரும்பி பார்க்கும் அளவில் இருக்க வேண்டும்.

தீவிரமாக பாடுபட வேண்டும்

எனவே வார்டு செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்களை திரட்டி வரவேற்பு நடக்கும் இடத்திற்கு அழைத்து வரவேண்டும். மேலும் தொடர்ந்து கட்சி பணியை தீவிரப்படுத்தி எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக்க அனைவரும் தீவிரமாக பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் மாரியப்பன், பாலு, சரவணன், முருகன், யாதவமூர்த்தி, ஜெயபிரகாஷ், சண்முகம், பாண்டியன், தகவல் தொழில் நுட்ப பிரிவு கனகராஜ், வர்த்தக அணி ராம்ராஜ், தொழிற்சங்க செயலாளர் சுந்தரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ஜான்கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story