மழை வெள்ள பாதிப்புகள் குறித்து தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை திறக்க ஏற்பாடு


மழை வெள்ள பாதிப்புகள் குறித்து தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை திறக்க ஏற்பாடு
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆய்வுக்கூட்டம்

ராணிப்பேட்டை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுக்கான வாராந்திர ஆய்வு கூட்டம் நடந்தது.

மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திங்கட்கிழமை நடைபெறும் குறைதீர்வு கூட்டத்தின்போது பெறப்படும் மனுக்கள் துறைகள் வாரியாக நிலுவைகள் குறித்தும், முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்களின் நிலுவை குறித்தும், அனைத்து துறையினரிடமும் கலெக்டர் கேட்டறிந்தார்.

குறைேதர்வு கூட்டங்களில் பெறப்படும் மனுக்களுக்கு ஒரு மாதத்திற்குள்ளாக பதிலளிக்க வேண்டும். முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது 3 மாதத்திற்கு மேல் நிலுவையில் உள்ள மனுக்கள் உடனடியாக தீர்வு காணப்பட்டு பதிலளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி இதனை முடிக்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் உத்தரவிட்டார்.

மேலும் அவர் பேசியதாவது :-

முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது ஒவ்வொரு வாரமும் 10 துறைகளின் தலைவர்கள் ஆய்வு கூட்டம் நடத்தப்படும். உரிய முறையில் இதன் மீது துறைத் தலைவர்கள் பணியாற்ற வேண்டும். மேலும் இக்கூட்டத்தில் துநை தலைவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

குறைதீர்வு கூட்டங்களில் பெரும்பான்மையான மனுக்கள் மாதாந்திர உதவித் தொகை கோரி வரப்படுகிறது. சமூக பாதுகாப்புத் துறை தாசில்தார்கள், மாதாந்திர உதவித் தொகை பெறுபவர்கள் குறித்து நேரடியாக வீடுகளுக்குச் சென்று விசாரணை செய்கின்றனர் என்பது குறித்து அறிக்கை அனுப்ப வேண்டும்.

மேலும், வடகிழக்கு பருவமழை காலங்களில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த துறைகள் இணைந்த கட்டுப்பாடு அறை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து செயல்படும் வகையில் கட்டுப்பாடு அறை செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தங்கள் துறைகளின் மூலம் ஆங்காங்கே நடைபெறும் வெள்ளப்பெருக்கு பாதிப்புகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன்,கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தாரகேஷ்வரி, வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story