கிருஷ்ணகிரியில்வியாபாரி வீட்டில் 42 கிலோ தலைமுடியை திருடிய வாலிபர் கைது


கிருஷ்ணகிரியில்வியாபாரி வீட்டில் 42 கிலோ தலைமுடியை திருடிய வாலிபர் கைது
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் வியாபாரி வீட்டின் கதவை உடைத்து 42 கிலோ தலைமுடியை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தலைமுடி திருட்டு

கிருஷ்ணகிரி புதுப்பேட்டை மேற்கு மாடதெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 49). இவர் தலைமுடியை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். வியாபாரியான இவர் கடந்த 26-ந் தேதி இரவு வீட்டை பூட்டி விட்டு ஒரப்பம் அம்மன் கோவில் திருவிழாவிற்கு குடும்பத்துடன் சென்றார். பின்னர் அவர் மீண்டும் வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் மதிப்பிலான 42 கிலோ தலைமுடி அடங்கிய மூட்டைகளை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது.

வாலிபர் கைது

இதுகுறித்து வெங்கடேசன் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து வெங்கடேசன் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்த போது அதில் தலைமுடியை திருடி சென்றது காவேரிப்பட்டணம் அருகே உள்ள மிட்டஅள்ளி எம்.எஸ்.நகரை சேர்ந்த ரஞ்சித்குமார் (27) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் திருடப்பட்ட 42 கிலோ தலைமுடியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story