விநாயகர் சிலை வைப்பது குறித்து அமைதி பேச்சுவார்த்தை:அதிகாரிகளை தகாத வார்த்தையால் பேசிய வாலிபர் கைது
கிருஷ்ணகிரி
சூளகிரி
சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கோவிலில் விநாயகர் சிலை வைக்க வேண்டும். கோவிலில் விநாயகர் சிலையை வைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, சூளகிரி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சக்திவேல் வட்டார வளர்ச்சி அலுவலர் பாப்பி பிரான்சினா ஆகியோர் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் (வயது32) என்பவர் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தகாத வார்த்தைகளால் பேசினார். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் சூளகிரி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story